அரசு நலத்திட்டங்கள் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ராதாபுரம் தொகுதி முழுவதும் அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் வகுப்பறைகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் அமைந்திருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கல்வித்துறை அலுவலகங்கள் ஆகிய 306 மையங்களில் 7.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே முதல்முறையாக ஒரு சட்டமன்றத் தொகுதி முழுவதும் இருக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட்டுள்ளன. யு.பி.எஸ்.சி முதல் நிலை தேர்வுக்கு ஊக்கத்தொகை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முதல்நிலை தேர்வை எதிர்கொள்வோர், ஊக்கத்தொகை பெறுவதற்கான புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவிகளுக்கான தேர்வுகளுக்கு தமிழக மாணவர்கள் தயாராகும் வகையில் ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும். இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஆயிரம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.7,500 அளிக்கப்படும்.