Tag: ONDC ஸ்டார்ட்அப் மஹோத்சவ்

தினசரி தேசிய நிகழ்வுகள்

ONDC ஸ்டார்ட்அப் மஹோத்சவ் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) புதுதில்லியில் டிஜிட்டல் வர்த்தகத்தில் திறந்த கட்டமைப்புக்கான புத்தொழில் பெருவிழா (ஓஎன்டிசி ஸ்டார்ட்அப் மஹோத்சவ்) என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியது. இந்த நிகழ்வு டிபிஐஐடி-ன் இரண்டு முதன்மை முயற்சிகளான ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சி மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த கட்டமைப்பு (ஓஎன்டிசி) ஆகியவற்றின் முக்கியத்துவம் மற்றும் ஒருங்கிணைப்பைக் குறிக்கிறது. ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சி பற்றி தொடக்கம் - ஜனவரி 16, 2016. குறிக்கோள் - தொழில்முனைவோரை ஆதரிப்பது, ஒரு ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவது மற்றும் இந்தியாவை வேலை தேடுபவர்களின் நாடாக மாற்றுவதாகும். ONDC பற்றி தொடக்கம் - செப்டம்பர் 2022 குறிக்கோள் - மின் வணிகத்திற்கான உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல்.