அறிக்கைகள் மற்றும் குறியீடுகள் ISSAR அறிக்கை 2023 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) சமீபத்தில் 2023க்கான இந்திய விண்வெளி நிலையின் மதிப்பீட்டு அறிக்கையை (ISSAR) வெளியிட்டது. இது பாதுகாப்பான மற்றும் நிலையான விண்வெளி இயக்க மேலாண்மைக்காக இஸ்ரோ அமைப்பால் (IS4OM) தொகுக்கப்பட்டது. விண்வெளியின் வெளி அடுக்கில் உள்ள விண்வெளி சார்ந்த பொருட்கள் பல்வேறு சுற்றுச்சூழல் ஆபத்துக்களால் பாதிக்கப்படுவதை இந்த அறிக்கை மதிப்பிடுகிறது. முக்கிய கண்டுபிடிப்புகள் தனியார் விண்வெளி மையங்களின் செயற்கைக்கோள்கள் உட்பட மொத்தம் 127 இந்திய செயற்கைக்கோள்கள் 31 டிசம்பர் 2023 வரை ஏவப்பட்டுள்ளன. இந்திய அரசுக்கு சொந்தமான செயல்படும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை(31 டிசம்பர் 2023 வரை) குறைந்த புவி சுற்றுப்பாதையில் 22 (LEO) புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் 29 (Geo-synchronous Earth Orbit). இந்தியாவின் மூன்று ஆழ்ந்த விண்வெளி திட்டங்கள் சந்திரயான்-2 சுற்றுப்பாதை ஆதித்யா-எல்1 சந்திரயான்-3 இன் உந்துவிசை தொகுதி. 2023 இல் இஸ்ரோவின் ஏழு வெற்றிகரமான ஏவுதல்கள் SSLV-D2/EOS7 LVM3-M3/ONEWEB_II PSLV-C55/ TeLEOS-2 GSLV-F12 NVS-01 PSLV-C56/ DS-SAR PSLV-C57/ஆதித்யா L-1