Tag: HCE survey

அரசியல் அறிவியல்

அரசு - நலன் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடு HCE survey புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வீட்டு நுகர்வு செலவின ஆய்வு (HCES) 2023-24ஐ வெளியிட்டுள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO), MoSPIயின் கீழ் இந்த ஆய்வை நடத்தியது. விவரம் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான குடும்பங்களின் நுகர்வு மற்றும் செலவினம் குறித்த தகவல்களை சேகரிக்க HCES வடிவமைக்கப்பட்டுள்ளது. பொருளாதார திட்டமிடல், வறுமை அளவீடு மற்றும் நுகர்வோர் விலைக் குறியீட்டை (CPI) புதுப்பிப்பதற்கான அத்தியாவசிய தரவுகளை வழங்குகிறது. HCESஇல் இருந்து தொகுக்கப்பட்ட மாதாந்திர தனிநபர் நுகர்வு செலவினம் (MPCE) பெரும்பாலான பகுப்பாய்வு நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படும் முதன்மை குறிகாட்டியாகும். குறிப்பு 18 பெரிய மாநிலங்களில், சராசரி MPCEயில் நகர்ப்புற-கிராமப்புற இடைவெளி 18 மாநிலங்களில் குறைந்துள்ளது. பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம் நூற்றாண்டு ரயில்வே பாலத்துக்கு நாராயணசாமி நாயுடு பெயர் விவசாயிகளின் உரிமைக்காகப் போராடிய நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு நினைவாக, கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலத்திற்கு அவரது பெயர் சூட்டப்படும், பிறந்த ஊரான வையம்பாளையத்தில் நூற்றாண்டு நினைவுவிழா நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாராயணசாமி நாயுடு, விவசாயிகளுக்கென தனி அமைப்பைத் தொடங்கி, பல மாநிலங்களில் உழவர் சங்கங்களை உருவாக்கினார். 1982-ஆம் ஆண்டு இந்திய உழவர் மற்றும் உழைப்பாளர் கட்சியைத் தொடங்கினார் . அவருடைய வாழ்நாளில், உழவர்கள் மற்றும் உழைப்பாளர்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடினார்