Tag: 25 ஆண்டுகளுக்குள் சர்க்கரை நோய் இல்லாத இந்தியா!

வரலாறு

இந்தியா மற்றும் அண்டை நாடுகள் இந்தியா – ஆஸ்திரேலியா 4 ஒப்பந்தங்கள் விளையாட்டு, சூரிய  எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பு இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற முதலாவது மாநாட்டில் விளையாட்டு, சூரிய எரிசக்தி, புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்தி வழிவகுக்கும் 4 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. விளையாட்டு, புத்தாக்கம், ஆடியோ-விஷூவல் தயாரிப்பு, சூரியஎரிசக்தி உற்பத்தி ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த வழிவகுக்கும் 4 ஒப்பந்தங்கள் மாநாட்டின்போது கையொப்பமாகின. மேலும், பசுமை எரிசக்தி, வர்த்தகம் – முதலீடு, பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், உணவுப் பொருட்கள் விநியோகம், கல்வி, கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் நிலவி வரும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது  தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. சுகாதாரம் 25 ஆண்டுகளுக்குள் சர்க்கரை நோய் இல்லாத இந்தியா! அடுத்த 25 ஆண்டுகளுக்குள் சர்க்கரை நோய் இல்லாத தேசத்தை உருவாக்கும் இலக்குடன் செயல்பட வேண்டும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். பேறுகால சர்க்கரை நோயை கட்டுபடுத்துவதன் மூலம் பிற்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முடியும். 2047-ல் உலக அளவில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா உருவெடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேறுகால சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தினால் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா உருவெடுக்கும்போது சர்க்கரை நோய் இல்லாத நிலையை நாம் எட்ட முடியும்.