Tag: 000 கி.மீ. பாய்மர படகுப் பயணம்

தமிழ்நாட்டு நிகழ்வுகள்

பொன் விழா ஆண்டு பெண் போலீஸார் 1,000 கி.மீ. பாய்மர படகுப் பயணம் தமிழக காவல் துறையில் மகளிர் காவலரின் பொன் விழா ஆண்டையொட்டி, 1,000 கி.மீ. பாய்மர படகுப் பயணத்தை சென்னையில் மாநில இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு காவல் துறையில் மகளிர் காவலர்கள் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகளாவதையொட்டி, பொன் விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 25 பெண் காவல் துறை பெண் அதிகாரிகள், பாய்மர படகு மூலம் சென்னையிலிருந்து கோடியக்கரை வரை 1,000 கி.மீ. சென்று, மீண்டும் சென்னைக்கு திரும்பும் வகையில் பயணம் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்கான தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது. பின்னணி 1973-ம் ஆண்டில் தமிழ்நாடு காவல்துறையில் ஒரு எஸ்ஐ (உஷாராணி), ஒரு தலைமை காவலர் மற்றும் 20 காவலர்கள் அடங்கிய முதல் பெண்கள் தொகுதி அன்றைய முதல்வர் மு.கருணாநிதியால் நியமிக்கப்பட்டது. 1976-ம் ஆண்டில், லத்திகா சரண் மற்றும் ஜி திலகவதி ஆகியோர் தமிழக கேடரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆவர். 1992-ம் ஆண்டில், மாநிலத்தில் முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் (AWPS) ஆயிரம் விளக்கு பகுதியில் அப்போதைய முதல்வர் ஜெ ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது. குறிப்பு கிரண் பேடி 1972-ல் இந்தியக் காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரி பதவியில் சேர்ந்த இந்தியாவின் முதல் பெண்மணி ஆவார். இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 1973-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் திறந்து வைக்கப்பட்டது.