Tag: ’வைக்கம்போராட்டம் ’நூல்

தமிழ்நாடு நிகழ்வுகள்

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா மார்ச் தொடங்கி ஓராண்டு முழுவதும் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றிலும் அமைந்த தெருக்களில் ஒடுக்கப் பட்டவர்கள் நடந்து செல்வதற்கு இருந்த தடைகளை நீக்கக் கோரி, வைக்கம் போராட்டம் நடைபெற் றது. இந்தப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியவர் பெரியார் ஈ.வெ.ரா. 1924-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி தொடங்கிய போராட்டம், 1925-ஆம் ஆண்டு நவ. 23-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகின்றன. ’வைக்கம்போராட்டம் ’நூல்  மாநிலத்தின் மிக முக்கிய ஆய்வாளர்களில் ஒருவரான          பழ.அதியமான் எழுதிய 'வைக்கம் போராட்டம்' என்ற. தமிழ் நூலின் மலையாள மொழி பெயர்ப்பு வெளியிடப்படுகிறது.இதன் தெலுங்கு கன்னடம், ஆங்கிலப்பதிப்புகளும் விரைவில் வெளியிடப்படும். வைக்கம் விருது: போராட்டம் நடத்திய பெரியார் ஈ.வெ.ரா.வை நினைவு கூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காக  பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்   ஆளுமைகள்  அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் வைக்கம் விருது அளிக்கப்படும். பெரியாரின் பிறந்த தினமான செப். 17- இல் தமிழ்நாடு அரசால் விருது வழங்கப்படும்.                                                                            பெரியார்நினைவிடம் வைக்கத்திலுள்ள பெரியார் ஈ.வெ.ரா. நினைவிடம் ரூ.8.14 கோடியில் நவீனமுறையில் மறுசீரமைக்கப்படும்.  தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு விருது                 கன்னியாகுமரியில் கடற்கரை முகப்பு மேம்பாட்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், சுற்றுலாத் தலங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மத்திய சுற்றுலா அமைச்சகம் மேம்படுத்தி வருகிறது. இதற்காக 'ஸ்வதேஷ் தர்ஷன்' என்ற திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்வதேஷ் தர்ஷன் பற்றி: ஸ்வதேஷ் தர்ஷன் என்பது மத்தியத் துறை திட்டமாகும். இது இந்திய அரசின் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகத்தால் 2014-15 இல் தொடங்கப்பட்டது. இது நாட்டில் கருத்துரு  அடிப்படையிலான சுற்றுலா சுற்றுகளை ஊக்குவிக்கிறது . இந்த சுற்றுலா சுற்றுகள் அதிக சுற்றுலா மதிப்பு, போட்டித்திறன் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்படும். ஸ்வதேஷ் தர்ஷன் 2.0: கருத்துரு  அடிப்படையிலான சுற்றுகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, இதன் கீழ், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், ஒரு நேரத்தில் ஒரு இடத்தின் மீது கவனம் செலுத்தப்படுகிறது. இது இந்தியாவின் புதிய உள்நாட்டு சுற்றுலாக் கொள்கைக்கு ஏற்ப உள்ளது, இது கருத்துரு அடிப்படையிலான சுற்றுலா சுற்றுகளில் இருந்து விலகி இலக்கு சுற்றுலாவை புதுப்பிக்க வலியுறுத்துகிறது. இது ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின்…