Tag: விட்லி தங்க விருது 2024

வரலாறு

முக்கிய தினங்கள் உலக தேனீ தினம் 2024 உலக தேனீ தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம்  அன்டன் ஜான்சாவின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் அனுசரிக்கப்படுகிறது. இவர் நவீன தேனீ வளர்ப்பின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள் : “Bee Engaged with Youth” விருதுகள் மற்றும் கௌரவம் விட்லி தங்க விருது 2024 பெருநாரையை (லெப்டோப்டிலோஸ் டூபியஸ்) பாதுகாத்ததற்காக சமீபத்தில் பூர்ணிமா தேவி பர்மனுக்கு 2024ம் ஆண்டிற்கான விட்லி தங்க விருது வழங்கப்பட்டது. இந்த விருது ‘பசுமை ஆஸ்கார்’ என்றும் அழைக்கப்படுகிறது. குறிப்பு இவர் ஏற்கனவே 2022 இல் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) ‘சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்’ விருதைப் பெற்றுள்ளார். இவர் அஸ்ஸாமில் உள்ள கிராமப்புற பெண்களின் குழுவான "ஹர்கிலா இராணுவத்தை" உருவாக்கினார் . பெருநாரை பற்றி IUCN நிலை – ஆபத்தானது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 இன் அட்டவணை IV இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது