Tag: வாதவன் துறைமுகம்

தினசரி தேசிய நிகழ்வுகள்

வாதவன் துறைமுகம் மகாராஷ்டிராவின் தகானு அருகே வாதவனில் பெரிய துறைமுகம் ஒன்றை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது அனைத்து வானிலைக்குமான  பெரிய பசுமை துறைமுகமாக உருவாக்கப்படும். இந்த துறைமுகம் முடிந்ததும் உலகின் முதல் 10 துறைமுகங்களில் ஒன்றாக இருக்கும். இந்த துறைமுகம்  பிரதமரின் கதி சக்தி பெருந்திட்டத்தின் (PMGS-NMP) ஒரு பகுதியாக கட்டப்பட உள்ளது. PMGS-NMP பற்றி தொடக்கம் - அக்டோபர் 13, 2021 குறிக்கோள் - இரயில்வே, சாலைகள், துறைமுகங்கள், நீர்வழிகள், விமான நிலையங்கள், வெகுஜனப் போக்குவரத்து, தளவாட உள்கட்டமைப்பு உள்ளிட்ட ஏழு கவனம் செலுத்தும் பகுதிகளுடன் பல்வேறு பொருளாதார மண்டலங்களுக்கு  பல்நோக்கு முனையங்கள் இணைப்பு உள்கட்டமைப்பை வழங்குதல்