தற்போதைய பொருளாதாரப் போக்குகள் ரெப்போ விகிதம் பணவியல் கொள்கைக் குழு (MPC) ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக தொடர்ந்து எட்டாவது முறையாக மாற்றாமல் வைத்துள்ளது. 'பண அளிப்பை விரிவாக்கும்’ பணவியல் கொள்கை நிலைப்பாட்டை பராமரிக்கவும் MPC குழு முடிவு செய்துள்ளது. MPC குழு பற்றி இந்தக்குழு திருத்தப்பட்ட RBI சட்டம், 1934 இன் பிரிவு 45ZB இன் கீழ் உருவாக்கப்பட்டது. MPCன் முதல் கூட்டம் - செப்டம்பர் 29, 2016. குறைவெண் - 4 உறுப்பினர்கள் உறுப்பினர்கள் – 6 (3 – RBI, 3 – மத்திய அரசு) தலைவர் - இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் (சக்திகாந்த தாஸ்) குறிப்பு வணிக வங்கிகள் கடன் வாங்கும்போது ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதம் ரெப்போ விகிதம் எனப்படும்.