Tag: முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

தமிழ்நாடு மாநில நிகழ்வுகள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அதிகமான பெண் குடும்பத் தலைவர்களை கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் கீழ் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இதுவரை சுமார் 1.15 கோடி பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளாக உள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பற்றி தொடக்கம்  - செப்டம்பர் 15, 2023 காஞ்சிபுரம் குறிக்கோள் - தகுதியுள்ள பெண் குடும்பத் தலைவர்களுக்கு மாதத்திற்கு ரூ 1,000 அடிப்படை குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்தல். பயனாளிகள்  - 21 வயது நிறைவடைந்த பெண்கள் (செப்டம்பர் 15, 2002க்கு முன் பிறந்தவர்) தமிழ்நாட்டின் மொழி அட்லஸ், 2011 இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் (RG & CCI) தமிழ்நாட்டின் மொழி அட்லஸ், 2011ஐ சமீபத்தில் வெளியிட்டார். இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையம் (RG & CCI) மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த அட்லஸ் தமிழ்நாட்டிற்கான 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவை அதன் பகுப்பாய்விற்குப் பயன்படுத்தியுள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7,21,47,030 ஆகும். தமிழ்நாட்டின் மொழி அட்லஸ், 2011, மாநில வாரியான இரண்டாவது மொழி அட்லஸ் ஆகும். முக்கிய கண்டுபிடிப்புகள் தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 18.49% பேர் ஆங்கிலம் பேசக்கூடியவர்கள். மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 2.11% பேர் இந்தி பேசக்கூடியவர்கள். மாநிலத்தில் உள்ள மொத்த மொழி பேசுபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட ஐந்து முக்கிய மொழிகள் - தமிழ் (6,37,53,997), தெலுங்கு (42,34,302), கன்னடம் (12,86,175), உருது (12, 64,537), மற்றும் மலையாளம் (7,26,096). குறிப்பு இந்தியாவின் மொழி அட்லஸின் முதல் பதிப்பு 2004 இல் 1991 மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவைப் பயன்படுத்தி வெளியிடப்பட்டது. அக்டோபர் 2023 இல் முதல் மாநில வாரியான மொழி அட்லஸ் வெளியிட்ட மாநில மேற்குவங்கமாகும். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வு முன்னாள் முதல்வர் கே.காமராஜரின் பிறந்தநாளில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 2,23,536 மாணவர்கள் பயனடைவார்கள். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் பற்றி தொடக்கம் - செப்டம்பர் 15, 2022 குறிக்கோள் - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குதல்.