Tag: மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி

தமிழக நிகழ்வுகள்

'சமூக அடிப்படையிலான புற்றுநோய் பரிசோதனை' ஈரோடு, திருப்பத்தூர், கன்னியாகுமரி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் சமூக அடிப்படையிலான புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஈரோடு, கன்னியாகுமரி மற்றும் ராணிப்பேட்டையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது, மேலும் உலகில் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ராணிப்பேட்டை இருக்கிறது. 'ஹீமோகுளோபினோபதியைக் கண்டறிவதற்கான சமூக அடிப்படையிலான பரிசோதனை திட்டம்' பழங்குடியின மக்களிடையே கதிர் அரிவாள் இரத்தசோகை மற்றும் தாலசீமியா போன்ற ரத்த சம்பந்தமான கோளாறுகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக, பழங்குடியினர் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ஹீமோகுளோபினோபதியைக் கண்டறியும் சமூக அடிப்படையிலான பரிசோதனை திட்டம் மூன்றாண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். 'டைப் 1 நீரிழிவு நோய்க்கான பதிவேடு ' மாநிலத்தில் முதல் முறையாக, டைப் 1 நீரிழிவு நோய்க்கான மாநில அளவிலான பதிவேட்டை சுகாதாரத் துறை உருவாக்கவுள்ளது. 'காசநோய்க்கான தடுப்பு நிலை மருத்துவ சேவைகள்' காசநோய் இல்லாத தமிழகம் என்ற இலக்கை அடைய, மருத்துவ மையங்களுக்கு பரிசோதனை நடவடிக்கைகளுக்காக ரூ.20 கோடி மதிப்பிலான கருவிகள் வழங்கப்படும். இது தவிர, காசநோய் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை மருந்துகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், தொகுதி அளவில் மருத்துவ சேவைகள் வழங்கப்படும். மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி மாமல்லபுரத்தில் முதன்முறையாக, வேர்ல்ட் சர்ஃபிங் லீக் தொடரின் ஒரு பகுதியாக சர்வதேச சர்ஃபிங் அலைச்சறுக்கு ஓபன் போட்டி வரும் ஆகஸ்ட் 14 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக அரசு, இந்திய சர்ஃபிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு சர்ஃபிங் சங்கம் சார்பில் இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச அளவிலான போட்டி நடத்தப்படுகிறது.ஏற்கெனவே செஸ் ஒலிம்பியாட் WTA டென்னிஸ் போட்டிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலால் சிறப்பாக நடத்தியுள்ளோம்.    விரைவில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியும் நடத்தப்பட உள்ளது.                                                                                   சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவித்தபடி விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவத்தை அரசு அளித்து வருகிறது. சமூக ஒற்றுமைக்கு உழைத்த  இளையபெருமாளுக்கு நூற்றாண்டு நினைவு மண்டபம் சமூக ஒற்றுமைக்காக  உழைத்தவரும்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) முன்னாள் தலைவருமான எல்.இளையபெருமாளின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது சொந்த ஊரான சிதம்பரத்தில் தமிழக அரசு நினைவு மண்டபம் கட்டவுள்ளது . இளையபெருமாள் மூத்த தலைவர்கள், அயோத்திதாசப்  பண்டிதர், ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா, என். சிவராஜ், எல்.சி. குருசாமி, சுவாமி சகஜானந்தர் உள்ளிட்டோர் சமூக சீர்திருத்தத்திற்காக பாடுபட்டவர்கள். மூன்று முறை எம்.பி.யாக இருந்த இவர், எழும்பூர் சட்டமன்றத் தொகுதியின் …