Tag: மங்கள்யான்-2

அறிவியல்

விண்வெளி மங்கள்யான்-2 இஸ்ரோ சமீபத்தில் தனது மங்கள்யான்-2 திட்டத்தை வெளியிட்டது. இந்த திட்டம் செவ்வாய் கிரகத்தில் ரோவர் மற்றும் ஹெலிகாப்டரை தரையிறக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் மூன்றாவது நாடாகும். மங்கள்யான்-1 திட்டம் பற்றி இது இந்தியாவின் முதல் கிரகங்களுக்கு இடையிலான பயணத் திட்டமாகும். தொடக்கம் - நவம்பர் 05, 2013. இந்தியா செவ்வாய் சுற்றுப்பாதைக்கு விண்கலங்களை வெற்றிகரமாக  ஏவிய நான்காவது நாடாகும். ஸ்பெகுலூஸ்-3பி ஸ்பெகுலூஸ்-3பி (SPECULOOS-3b) எனப்படும் பூமியின் அளவிலான புதிய புறக்கோளை சர்வதேச வானியலாளர்கள் குழுகண்டுபிடித்துள்ளது. இது பூமியில் இருந்து 55 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது மிகவும் குளிர்ந்த சிவப்பு குள்ள நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. குறிப்பு ஸ்பெகுலூஸ் திட்டம் தீவிர குளிர் குள்ள நட்சத்திரங்களை சுற்றும் புறக்கோள்களை தேட உருவாக்கப்பட்டது.