Tag: பெண்களுக்கான கிராண்ட்மாஸ்டர் பட்டம்

வரலாறு

உலக ஹோமியோபதி தினம் ஹோமியோபதியின் நிறுவனரான ஜெர்மன் மருத்துவர் டாக்டர் சாமுவேல் ஹானிமனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது. டாக்டர் சாமுவேல் ஹானிமேன் ஏப்ரல் 10, 1755 இல் பாரிஸில் பிறந்தார். இந்த நாள் ஹோமியோபதி மற்றும் உலகெங்கிலும் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் அதன் பங்களிப்புகளை கொண்டாடுவதற்கும் கௌரவிப்பதற்கும் குறிக்கப்படுகிறது. கருத்துரு  2023: "ஒரு ஆரோக்கியம், ஒரு குடும்பம்." விளையாட்டு பெண்களுக்கான கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெண்களுக்கான கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ வென்றுள்ளார். பெண்கள் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்ற இந்தியாவின் 25வது செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ ஆவார். விருதுகள் & கௌரவங்கள்  புள்ளியியல் துறைக்கான சர்வதேச பரிசு இந்திய அமெரிக்கரான சி.ஆர். ராவ் 102 வயதில் புள்ளியியல் துறைக்கான நோபல் பரிசுக்கு இணையான சர்வதேசப் பரிசை வென்றுள்ளார் . இந்திய அமெரிக்க புள்ளியியல் வல்லுனரான கலியம்புடி ராதாகிருஷ்ண ராவுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான புள்ளியியல் துறைக்கான நோபல் பரிசுக்கு இணையான சர்வதேசப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதானது "அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மனித நலனை முன்னேற்ற புள்ளிவிபரங்களைப் பயன்படுத்தி முக்கிய சாதனைகளுக்காக" தனிநபர் அல்லது குழுவிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.