முக்கியமான நாட்கள் உலக பாரம்பரிய தினம் நமது கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 18ம் தேதி உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில், இந்த நாள் நினைவுச்சின்னங்கள் மற்றம் தளங்களுக்கான சர்வதேச தினம் என்றும் குறிப்பிடப்படுகிறது. யுனெஸ்கோ உலக பாரம்பரியத்தின் 50 வது ஆண்டு நினைவு தினம் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. 2023ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் “பாரம்பரிய மாற்றங்கள்“ புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள் கரிசல் நாவல் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலனின் சிறந்த நாவல்களில் ஒன்றான கரிசல், அவரது பேத்தியும் மருத்துவருமான பிரியதர்ஷினியால் ’கருப்பு மண்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடதுசாரிக் கொள்கைகளைப் பரப்புவதும், விவசாய சங்கங்கள் அமைப்பதும் என்ற தலைப்பில் 1976-ல் வெளிவந்தது ’கரிசல்’ நாவல். பொன்னீலன் தனது புதிய தரிசனங்கள் என்ற தமிழ் நாவலுக்காக 1994 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார்.