பாரிஸ் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு பிரதமர் மோடி மற்றும் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நோக்கம்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் உலகளாவிய ஒத்துழைப்பை வளர்ப்பது இந்த உச்சிமாநாடு பிரான்ஸ் மற்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) & சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் துவக்கப்பட்டது. இந்தியா இந்த அமைப்பின் நிறுவன உறுப்பினராகும் பிற செயற்கை நுண்ணறிவு முன்முயற்சிகள் இந்தியா AI திட்டத்திற்காக ரூ.10,300 கோடிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் பாஷினி – இந்திய மொழிகளுக்கான AI அடிப்படையிலான மொழிபெயர்ப்பு கருவி ஐராவத்: புனேவில் உள்ள C-DAC-ல் நிறுவப்பட்ட இந்தியாவின் AI சூப்பர் கம்ப்யூட்டர் பிரான்ஸில் புதிய இந்திய துணைத் தூதரகம் திறப்பு பிரான்ஸின் மார்சே நகரில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் திறந்துவைத்தனர். தலைநகர் பாரீஸில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி,மேக்ரானுடன் இணைந்து தலைமை வகித்தார். மார்சே அருகே உள்ள கேடராச் நகரில் சர்வதேச வெப்ப அணுக்கரு பரிசோதனை உலை (ஐடி இஆர்) திறக்கப்பட்டது. உலகின் மிக முக்கியமான அணுக்கரு இணைவு எரிசக்தி திட்டங்களில் ஒன்றான ஐடி இஆர் வளாகத்திற்கு மற்ற நாட்டின் தலைவர் வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.