Tag: பாலில் கலப்படத்தை கண்டறியும் சாதனம் கண்டுபிடிப்பு

தமிழ்நாடு நிகழ்வுகள்

பாலில் கலப்படத்தை கண்டறியும் சாதனம் கண்டுபிடிப்பு பாலில் கலப்படத்தைக் கண்டறிய முப்பரிமாண (3டி) கையடக்க காகித சாதனத்தை மெட்ராஸ் IIT உருவாக்கியுள்ளது . மெட்ராஸ்  IIT ஆராய்ச்சியாளர்கள் முப்பரிமாண (3டி) காகித அடிப்படையிலான கையடக்க    சாதனத்தை உருவாக்கியுள்ளனர், இதன் மூலம்  பாலில் கலப்படத்தை 30 வினாடிகளுக்குள் கண்டறிய முடியும். இந்த சோதனையை வீட்டிலேயே கூட செய்யலாம். யூரியா, சவர்க்காரம், சோப்பு, ஸ்டார்ச், ஹைட்ரஜன் பெராக்சைடு, சோடியம்-ஹைட்ரஜன்-கார்பனேட் மற்றும் உப்பு உள்ளிட்ட கலப்படத்துக்குப்   பொதுவாக பயன்படுத்தப்படும் பல பொருட்களைக் கண்டறிய முடியும் . வழக்கமான ஆய்வக அடிப்படையிலான பாலின் தூய்மையை பரிசோதிக்கும் முறைகளில்  கால விரயம் மற்றும் கூடுதல் செலவு ஏற்படுகிறது , இந்த புதிய தொழில்நுட்பம் மலிவு விலையில்    தண்ணீர், பழச்சாறு மற்றும் மில்க் ஷேக் போன்ற பிற திரவங்களை சோதிக்கவும் பயன்படுத்தப்படலாம். இ-சேவை மையம் 2.0 அறிமுகம் இ-சேவை  மையம் 2.0 விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். இ-சேவைமையங்களில் 600 வகையான சேவைகள் விரைவில் வழங்கப்படும். தமிழக அரசின் 235 சேவைகள் 9720 இ-சேவா மையங்கள் மூலம் வழங்கப்படுகிறது. இதன் மூலம், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் வெளிப்படைத்தன்மையுடன் விரைவாகக் கிடைக்கும்.