Tag: நைட்ரஸ் ஆக்சைடு உமிழ்வுகள்

புவியியல்

சுற்றுச்சூழல் நைட்ரஸ் ஆக்சைடு உமிழ்வுகள் எர்த் சிஸ்டம் சயின்ஸ் டேட்டா இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, நைட்ரஸ் ஆக்சைடு (N2O) உமிழ்வுகள் வெளியிடப்படுவதில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. 2020ல் உலக அளவில் மனிதனால் உருவாக்கப்பட்ட உமிழ்வுகளில் கிட்டத்தட்ட 11% இந்தியாவில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த உமிழ்வுகளின் முக்கிய ஆதாரம் உர பயன்பாட்டிலிருந்து வருகிறது. கடந்த நான்கு தசாப்தங்களில் மனித நடவடிக்கைகளில் இருந்து வெளிவரும்  N2O உமிழ்வு 40% அதிகரித்துள்ளது. குறிப்பு N2O என்பது ஒரு பசுமை இல்ல வாயு ஆகும், இது கார்பன் டை ஆக்சைடை விட வளிமண்டலத்தை வெப்பமாக்குகிறது.