Tag: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் ₹5.60 கோடி செலவிட்டுள்ளது

தமிழ்நாடு மாநில நிகழ்வுகள்

தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கை, 2023க்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் தனியார் பங்களிப்புடன் துறைமுகங்களை மேம்படுத்துவதற்கான தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கை, 2023க்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மறுசுழற்சி, கப்பல் கட்டுதல் மற்றும் துறைமுகங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பதே இந்தக் கொள்கையின்  நோக்கமாகும். தமிழ்நாட்டின் சிறு துறைமுக மேம்பாட்டுக் கொள்கை, 2007க்கு மாற்றாக இந்தக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பு தமிழ்நாட்டின் மூன்று பெரிய துறைமுகங்கள் - சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி. இடைநிலைத்  துறைமுகம் – நாகப்பட்டினம் சிறு துறைமுகங்கள் - 17 கடற்கரை நீளம்  - 1,076 கி.மீ நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் ₹5.60 கோடி செலவிட்டுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட கேள்விகளுக்கான பதிலின்படி, நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம்  ₹5.60 கோடி செலவிட்டுள்ளது. தூத்துக்குடியில் 2018ல் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க தமிழக அரசால் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைக்கப்பட்டது.