நவி மும்பை விமான நிலையம் நவி மும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் மார்ச் 2025 முதல் செயல்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் தெரிவித்தார். தற்போது கட்டப்பட்டு வரும் விமான நிலையத்திற்கு தினகர் பாலு பாட்டீல் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவர் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சியின் தலைவராக இருந்தார். குறிப்பு தமிழ்நாட்டில் உள்ள 4 சர்வதேச விமான நிலையங்கள் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகும்.