முக்கிய தினங்கள் தேசிய கடல்சார் தினம் -ஏப்ரல் 5 ஒவ்வொரு ஆண்டும், வர்த்தக உலகில் இந்தியாவின் முதல் வணிக கடல் பயணத்தை நினைவுகூரும் வகையில் ஏப்ரல் 5 ஆம் தேதியை தேசிய கடல்சார் தினமாக இந்தியா கொண்டாடுகிறது. இந்த நாள் முதன்முதலில் 1964 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. பாதுகாப்பு ’SLINEX -2023 கடற்பயிற்சி' இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வருடாந்த SLINEX-2023 இருதரப்பு கடல்சார் பயிற்சியின் 10வது பதிப்பு இலங்கையின் கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. பயிற்சி 03-08 ஏப்ரல் 2023 வரை நடத்தப்படும். இப்பயிற்சி இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, துறைமுக கட்டம் மற்றும் கடல் கட்டம், ஒவ்வொன்றும் மூன்று நாட்கள் நீடிக்கும். இந்திய கடற்படையின் சார்பில் INS கில்தான் மற்றும் INS சாவித்ரி பங்கேற்கிறது. SLINEX 2005 முதல் நடைபெற்று வருகிறது . இப்பயிற்சியின் நோக்கம், இரு கடற்படைகளுக்கிடையேயான பலதரப்பட்ட கடல்சார் நடவடிக்கைகளில், இடை-இயக்கத்தை மேம்படுத்துவது, பரஸ்பர புரிதலை மேம்படுத்துவது மற்றும் சிறந்த நடைமுறைகளை பரிமாறிக்கொள்வதாகும்.