Tag: தற்காலிக சபாநாயகர்

வரலாறு

முக்கிய தினங்கள்  பாலைவனமாதல் மற்றும் வறட்சியை எதிர்ப்பதற்கான சர்வதேச  தினம் 2024 வருங்கால சந்ததியினருக்காக நில வளங்களை பாதுகாக்க கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க ஒவ்வொரு ஆண்டுதோறும் ஜூன் 17 அன்று இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள்  - United for Land. Our Legacy. Our Future. 2007 ஆம் ஆண்டில், ஐநா 2010 முதல் 2020 வரையிலான பத்தாண்டுகளை ஐக்கிய நாடுகளின் பாலைவனங்களுக்கான தசாப்தம் மற்றும் பாலைவனமாக்கலுக்கு எதிரான போராட்டமாக அறிவித்தது. நியமனங்கள் தற்காலிக சபாநாயகர்  18வது மக்களவையின் தற்காலிக  சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப் ஜனாதிபதி திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டார். புதிய எம்.பி.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பது தற்காலிக சபாநாயகரின் முதன்மைக் கடமையாகும். குறிப்பு சபாநாயகர் தேர்தல் வரை சபாநாயகர் கடமைகளைச் செய்ய அரசியலமைப்பின் 95 (1) வது பிரிவின் கீழ் இந்த நியமனம் செய்யப்படுகிறது. தற்கால சபாநாயகர் பற்றி இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை.