Tag: தமிழ்ப் புதல்வன் திட்டம்

தமிழ்நாடு மாநில நிகழ்வுகள்

வெள்ளத் தடுப்பு திட்டங்கள் சென்னையில் முன்மொழியப்பட்ட நகர்ப்புற வெள்ளத் தடுப்பு திட்டங்களுக்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ₹150 கோடி மானியத்தை அனுமதித்துள்ளது. தேசிய பேரிடர் தணிப்பு நிதியின் கீழ் மாநில அரசுக்கு முதல் தவணையாக இந்த மானியம் வழங்கப்படும். ஐந்து முக்கிய திட்டங்களுக்கு மானியம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அவை: சிறு நீர்நிலைகளுடன் இணைக்கப்பட்ட சில உபரி கால்வாய்களை மேம்படுத்துதல் தற்போதுள்ள வடிகால் வலையமைப்பில் உள்ள இடைவெளிகளை நிரப்ப புதிய மழைநீர் வடிகால்களை அமைத்தல் ஸ்பாஞ்ச் பூங்காக்களை உருவாக்குதல் எட்டு நீர்நிலைகளை புனரமைத்தல் நீர்த்தேக்கங்களின் செயல்பாடுகளை தானியங்கிமயமாக்க மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவு கைப்பற்றல் (SCADA) அமைப்பை நிறுவுதல். NDMA பற்றி பேரிடர் மேலாண்மைக்கான உச்ச அமைப்பாகும். தலைவர் - இந்தியப் பிரதமர். பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 ன் மூலம் தொடங்கப்பட்டது இந்தியாவின் 30வது வெளியுறவு எல்லைப் பேச்சுவார்த்தை இந்தியா-சீனா எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயல்முறை பொறிமுறையின் (WMCC) 30வது கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றது. எல்லைப் பகுதிகளில் அமைதியையும் நிம்மதியையும் கூட்டாக நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். குறிப்பு சோசலிச அல்லாத நாடுகளில் சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய முதல் நாடு இந்தியா (ஏப்ரல் 1, 1950) ஆகும். இந்தியா - சீனா போர் – 1962 அக்சாய் சின் - இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான சர்ச்சைக்குரிய பகுதி. தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் 9 அன்று கோயம்புத்தூரில் தமிழ்ப்  புதல்வன் திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 2024-25 ஆம் ஆண்டில் 3.28 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்திட்டத்தால் பயனடைவர். இத்திட்டம் மாணவிகளுக்காக தொடங்கப்பட்ட புதுமைப் பெண் திட்டத்தைப் போன்றது. தமிழ்ப் புதல்வன் திட்டம் பற்றி நோக்கம் - பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த மாணவர்களிடையே உயர்கல்வியை ஊக்குவித்தல். பயன் - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ₹1,000 நிதி உதவி வழங்கப்படும்.

தமிழ்நாடு மாநில நிகழ்வுகள்

தமிழகத்தின்  IGST வரிவசூல்  ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியின் (IGST) கீழ் ₹1,523.95 கோடியை தமிழகம் வசூலிக்க வணிக வரித்துறையால் அமைக்கப்பட்ட வரி ஆராய்ச்சிப் பிரிவு உதவியுள்ளது. IGST என்பது மாநிலங்களுக்கு இடையேயான சரக்குகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் மத்திய அரசால்  விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது மேலும்  மாநிலங்களுடன் வரிப்பகிர்வு  செய்யப்படுகிறது. வரி ஆராய்ச்சி பிரிவு பற்றி தொடக்கம்  - டிசம்பர் 30, 2022. குறிக்கோள் - வருவாய் போக்கை ஆய்வு செய்து, வருவாயை பெருக்க நடவடிக்கைகளை பரிந்துரைத்தல். ஜிஎஸ்டி பற்றி: தொடக்கம் - ஜூலை 1, 2017 அரசியலமைப்பு (101வது திருத்தம்) சட்டம் 2016 கீழ் உருவாக்கப்பட்டது . மூன்று வகையான ஜிஎஸ்டிகள் உள்ளன.அவை, CGST (மத்திய) SGST (மாநிலம்) மற்றும் IGST (ஒருங்கிணைந்தவை) வரி அடுக்குகள் - 0%, 5%, 12%, 18%, 28%. ஜிஎஸ்டி கவுன்சில் பிரிவு 279A இன் கீழ் உருவாக்கப்பட்டது. தமிழ்ப் புதல்வன் திட்டம் 2024 ஆகஸ்ட் மாதம் தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். குறிக்கோள் - பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த  மாணவர்களிடையே உயர்கல்வியை ஊக்குவித்தல். பலன் - அரசு நடத்தும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த பிறகு உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ₹1,000 நிதியுதவி வழங்கப்படும்.