நியமனங்கள் தமிழக தலைமைத் தகவல் ஆணையர் ஷகீல் அக்தர் தமிழக தலைமைத் தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஷகீல் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மனிதவள மேலாண்மைத் துறை செயலர் கே.நந்தகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஷகீல் அக்தர் அவர்களுக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்வில், பதவியேற்பு உறுதிமொழியை ஆளுநர் ஆர்.என்.ரவி செய்துவைப்பார். குறிப்பு நியமனம் - முதல்வர், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஒரு மாநில அமைச்சர் ஆகியோரைக் கொண்ட குழுவின் பரிந்துரையின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்படுவார். பதவிகாலம் -பதவியேற்கும் நாளில் இருந்து மூன்று ஆண்டுகள் அல்லது 65 வயது என இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரை.