Tag: தமிழகத்தின் முதல் மிதவை உணவக கப்பல்

தமிழ்நாடு நிகழ்வுகள்

 தமிழக பேரிடர் மேலாண்மைக் கொள்கை 2023 வெளியீடு தமிழக பேரிடர் மேலாண்மைக் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மாநில பேரிடர் மேலாண்மைக் கொள்கை சில முக்கிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வலுவான பேரிடர் மேலாண்மை இயக்கத்தின் மூலம் அனைத்து வகை பேரிடர்களின் எதிர்மறையான விளைவுகளை குறைப்பது, உயிரிழப்பு, பொதுச் சொத்துகள் மற்றும் உள்கட்டமைப்புகளின் சேதங்களை தவிர்ப்பதே கொள்கையின் நோக்கமாகும்.  மேலும், பலவகை பேரிடர்களுக்கான எச்சரிக்கை அமைப்பு, ஆபத்து, பேரிடர் பாதிப்புகளின் மதிப்பீடு, அபாயம் குறித்த பகுப்பாய்வு, பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான தணிப்பு நடவடிக்கைகள், பேரிடர் அபாயக் குறைப்புப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து இணைந்து செயல்படுதல் ஆகியவற்றின் மீது பேரிடர் மேலாண்மைக் கொள்கை கவனம் செலுத்துகிறது. பேரிடர்களால் ஏற்படும் இறப்பு, பாதிப்புக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை, நலிந்த பிரிவினருக்கு ஏற்படும் பாதிப்பு, அடிப்படை சேவைகளின் பாதிப்பு, பொருளாதார இழப்பு ஆகியவற்றைக் குறைப்பதற்கு கொள்கையானது முக்கியத்துவம் அளிக்கிறது. இத்துடன், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மைத் திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. வெள்ளம், கனாமி, சூறாவளி, வறட்சி, வெப்பக் காற்று, நிலச்சரிவுகள், பூகம்பம், ரசாயன தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகள், அணுமின் நிலையங்கள், கதிர்வீச்சுகள் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு பேரிடர் காலங்களில் அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு  முன்னுரிமைகள் குறித்தும், பல்வேறு துறைகளின் பொறுப்பு மற்றும் பங்களிப்பு பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. மலைப் பகுதிகளில் தொலைநிலை சிறப்பு மருத்துவ சேவை! மக்கள் நல்வாழ்வுத்துறை புதிய முயற்சி தமிழகத்தில் மலைப் பகுதிகள், பின் தங்கிய ஊரகப் பகுதிகளில் உயர் சிறப்பு மருத்துவ சேவைகளை தொலைநிலை முறையில் (டெலி மெடிசன்) வழங்குவதற்கான முயற்சியை மக்கள் நல்வாழ்வுத் துறை முன்னெடுத்துள்ளது. தமிழகத்தில் தற்போது 2,227 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.  அவற்றில் 1,800 சுகாதார நிலையங்கள் கிராமப்புறங்களில் அமைந்துள்ளன. இதைத் தவிர 100-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடிப்படை வசதிகள் குறைந்த பகுதிகளில் உள்ளன. அங்குள்ள மக்கள் மருத்துவ தேவைகளுக்கு அந்த ஆரம்ப சுகாதார நிலையங்களையே சார்ந்திருக்கின்றனர். தமிழகத்தில் தொலைத் தொடர்பு சென்றடையாத அனைத்து கிராமங்களுக்கும் அத்தகைய வசதியை வழங்கும் நோக்கில் தமிழ்நாடு கண்ணாடி இழை இணைய சேவை கழக நிறுவனம் (TANFINET) தொடங்கப்பட்டது.  அதன்கீழ் மலைப் பகுதிகளிலும், மிகவும் பின்தங்கிய கிராமங்களிலும் இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு அதன் வாயிலாக மருத்துவ சேவையின் தரத்தை மேம்படுத்த மக்கள் நல்வாழ்வுத் துறை திட்டமிட்டது. தமிழகத்தின் முதல் மிதவை உணவக கப்பல் திருப்போரூர் கோவளம் அடுத்த முட்டுக்காட்டில் ரூ.5 கோடியில் தயாராகும் பிரம்மாண்ட 2 அடுக்கு மிதக்கும் உணவக கப்பலின் கட்டுமான பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்  தொடங்கி வைத்தார்.