Tag: ஜுனியர் ஆடவர் ஆசியக் கோப்பை 2023.

வரலாறு

முக்கிய நாட்கள் ஜுன் 2 – தெலுங்கானா உருவான நாள் தெலுங்கானா மாநிலம் அதிகாரப்பூர்வமாக 2 ஜுன் 2014 அன்று உருவாக்கப்பட்டது. பின்னணி இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு ஹைதராபாத் நிஜாமை இந்திய யூனியனில் சேருமாறு அரசாங்கம் கோரியதற்கு அவர் மறுத்துவிட்டார். 1948-ல் இந்திய ராணுவம் ஹைதராபாத்தை இந்திய யூனியனுடன் இணைத்தது. 1953-ல், மாநில மறுசீரமைப்பு ஆணையம் நியமிக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டில், மொழிவாரி மாநிலங்களின் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக ஹைதராபாத் மாநிலம் கலைக்கப்பட்டு, தெலுங்கானா தெலுங்கு பேசும் ஆந்திரா மாநிலத்துடன் இணைக்கப்பட்டு ஆந்திரப் பிரதேசம் உருவானது. 2 ஜுன் 2014 அன்று, தெலுங்கானா பகுதி ஆந்திரப் பிரதேசத்தின் வடமேற்குப் பகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலமாக ஹைதராபாத்தை தலைநகராகக் கொண்டது. பாதுகாப்பு அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி நடுத்தர தொலைவு அக்னி-1 பாலிஸ்டிக் ஏவுகணை ஒடிஸாவின் ஏபிஜெ அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. அக்னி-1 பாலிஸ்டிக் ஏவுகணை “மிக உயர்ந்த நிலையிலிருந்து இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களைத் தாங்கி 5,000 கி.மீ. தொலைவுக்குச் செல்லும் திறன் கொண்ட அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா கடந்த 2022 டிசம்பர் மாதம் வெற்றிகரமாக சோதனை செய்தது. அக்னி 1 முதல் அக்னி 4 வரையிலான ஏவுகணைகள் 700 கி.மீ. முதல் 3,500 கி.மீ. தொலைவு வரை பாய்ந்து செல்லும் திறன் கொண்டவையாகும்.  பின்னணி ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டம் (IGMDP) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (DRDO) ஏவுகணைகளின் விரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக நிர்வகிக்கப்படுகிறது. அப்துல் கலாம் தலைமையில் 1982-83 இல் திட்டம் தொடங்கப்பட்ட இந்த ஏவுகணைகள் திட்டம் வெற்றிகரமாக 2008 இல் முடிந்தது. இந்தியாவின் ஏவுகணை நாயகன் – டாக்டர் ஏபிஜே.அப்துல் கலாம் குறிப்பு இந்தியாவின் ஏவுகணை பெண் – டெஸ்ஸி தாமஸ் (DRDO வில் அக்னி-IV ஏவுகணைக்கான முன்னாள் திட்ட இயக்குநர்) விளையாட்டு ஜுனியர் ஆடவர் ஆசியக் கோப்பை 2023. ஓமனின் சலாலாவில் நடைபெற்ற ஆடவர் ஜுனியர் ஆசியக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. ஆடவருக்கான ஜுனியர் ஆசியக் கோப்பையில் இது இந்தியாவின் நான்காவது பட்டமாகும். இதற்கு முன்பு 2004, 2008 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் இந்தியா மூன்று முறை போட்டியை வென்றது. இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் – மன்பிரீத் சிங் இந்தியா மற்றும் அண்டை நாடுகள் இந்தியா-நோபாளம்  நேபாள பிரதமர் புஷ்பகமல் தாஹால் என்ற பிரசண்டா அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை எல்லை கடந்த பெட்ரோலிய குழாய் அமைப்பு விரிவாக்கம். ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் உருவாக்கம், நீர்மின்சக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட ஏழு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே கையொப்பமாகின. அடுத்த 10 ஆண்டுகளில் நேபாளத்தில் இருந்து தில்லிக்கு பெறப்படும் மின்சாரத்தின் அளவு, 10 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கப்படும்…