விருதுகள் மற்றும் கௌரவங்கள் 'தமிழ்ச் செம்மல்' விருது தமிழ் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பு வழங்கிய 38 பேருக்கு தமிழ்ச் செம்மல் விருதை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். தமிழ் மொழிக்குத் தொண்டாற்றி வரும் தனிநபர் மற்றும் அமைப்புகளுக்கு தமிழக அரசு பல்வேறு விருதுகள் மற்றும் சிறப்புகளை அளித்து, அவர்களது தமிழ்த்தொண்டுக்குப் பெருமை செய்து வருகிறது. மாவட்ட அளவில் தமிழ்த் துறைக்கு தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் 'தமிழ்ச் செம்மல் விருது' வழங்கப்படுகிறது. விருதாளர்களுக்கு தலா ரூ.25,000 காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. சென்னை காவல்துறையில் 73 பேருக்கு பதக்கம் ; மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியா முழுவதும் சிறப்பாகப் பணிபுரியும் காவல்துறையினரையும் மத்திய பாதுகாப்பு படையினரையும் ஊக்குவிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மிகச்சிறந்த சேவைக்கான பதக்கம் (அதி உத்கிரிஷ்ட் சேவா பதக்கம்), சிறந்த சேவைக்கான பதக்கம் (உத்கிரிஷ்ட் சேவா பதக்கம்) 2018-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகின்றன. மிகச் சிறந்த சேவைக்கான பதக்கம், 25 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித தண்டனைகளும் இன்றி பணிபுரியும் போலீஸாருக்கும், சிறந்த சேவைக்கான பதக்கம் 15 ஆண்டுகளுக்கு மேலாக எந்த தண்டனையும் இன்றி பணிபுரியும் போலீஸாருக்கும் வழங்கப்படுகின்றன. 2020 - 2021-ஆம் ஆண்டுகளில் சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 73 பேருக்கு அறிவிக்கப்பட்டன.