முக்கிய இடங்கள் பற்றிய செய்திகள் குமரியில் கண்ணாடிக் கூண்டுப் பாலம் கன்னியாகுமரி கடலில், விவேகானந்தர் மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே அமைக்கப்படவுள்ள கண்ணாடிக் கூண்டுப் பாலத் திட்டத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு 2023 மே 24 அடிக்கல் நாட்டினார். மேலும், கடலில் இரு பாறைகளில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றைப் பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் மூலம் 3 படகுகள் இயக்கப்படுகின்றன. புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவுக்கு அதிகாரப்பரிமாற்றம் நடந்ததை அடையாளப்படுத்தும் வகையில் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவிடம் 1947-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட “செங்கோல்”, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நிறுவப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இந்தச் செங்கோல் தற்போது பிரபாக்ராஜ் நேரு அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது. பின்னணி சோழ மன்னர்கள் அதிகார பரிமாற்றத்துக்கு புனித அடையாளமாக செங்கோல் பரிமாற்றம் செய்த பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்க ராஜாஜி ஆலோசனை கூறினார். 1947 ஆகஸ்ட் 14-ஆம் நாள் நள்ளிரவில், மவுண்ட்பேட்டனிடம் இருந்து செங்கோலை. திருவாவடுதுறை இளைய தம்பிரான் முதலில் பெற்றாா். செங்கோலுக்குப் புனித நீர் தெளித்து ஓதுவா மூர்த்தி, வேபுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் என்று தொடங்குகிற திருஞான சம்பந்தரின் கோளறு பதிகத்தை அடியாா்கள் வானில் அரசாள்வா் ஆணை நமதே என்று முழுமையாகப் பாடி ஆசிா்வதித்து செய்கோலை ஜவாஹர்லால் நேருவிடம் வழங்கினார். நியமனங்கள் சென்னை உயர்நீதிமன்ற புதிய பொறுப்பு தலைமை நீதிபதி நியமனம் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதியாக இருந்த டி.ராஜா 24.05.2023 -யுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் 2-ஆவது மூத்த நீதிபதியான எஸ்.வைத்தியநாதனை பொறுப்புத் தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிமட்டுள்ளார். 25.05.2023 முதல், நீதிபதி வைத்தியநாதன் தலைமை நீதிபதி பணிகளை மேற்கொள்வார். மும்பை உயர்நீதி மன்ற பொறுப்புத் தலைமை நீதிபதியாக உள்ள கங்கா பூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரை மீது மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை. சிபிஐ இயக்குநராக பிரவீண் சூட் பதவியேற்பு சிபிஐ இயக்குநராகப் பொறப்பு வகித்து வந்த சுபோத்குமார் ஜெய்ஸ்வாலின் பதவிக்காலம் நிறைவடைவதையடுத்து, கர்நாடக டிஜிபி பிரவீண் சூட்டை அடுத்த இயக்குநராக நியமிக்க பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரி உள்ளிட்டோர் அடங்கிய உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்தது. சிபிஐ இயக்குநரின் பணிக்காலம் இரண்டு வருடங்கள். சிபிஐ இது சட்டப்பூர்வ அமைப்பு அல்ல. இது டெல்லி சிறப்பு போலீஸ் ஸ்தாபன சட்டம், 1946 இலிருந்து அதிகாரங்களைப் பெறுகிறது. மத்திய புலனாய்வுப் பணியகம் 1.4.1963 இல் இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் தீர்மானத்தின் மூலம் நிறுவப்பட்டது.