காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு சுற்றுச்சூழல் நோக்கத்திற்காக சுமார் 25 ஆயிரம் மில்லியன் கன அடி (டிஎம்சி அடி) விடுவிக்குமாறு காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு கர்நாடகாவிற்கு அறிவுறுத்தியுள்ளது. காவிரி நதிநீர்ப் பிரச்னை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும் கண்காணிக்கவும் அதன் விதிகளின்படி நீர் விநியோகத்தை ஒழுங்குபடுத்தவும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு (CWRC) நிறுவப்பட்டது. குறிப்பு காவிரிப் பிரச்சனை 3 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தை உள்ளடக்கியது. அவை, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகும். GWF தலைமைத்துவ விருது இந்தியாவின் விண்வெளி ஒழுங்குமுறை நிறுவனமான இன்-ஸ்பேஸ் நிறுவனத்துக்கு "பொதுக் கொள்கை: தொழில் வளர்ச்சியை செயல்படுத்துவதற்காக" உலகளாவிய புவிசார் மன்ற (GWF) தலைமைத்துவ விருது ராட்டர்டாமில் வழங்கப்பட்டது. 2024 உலகளாவிய புவிசார் மன்ற நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது. இன்-ஸ்பேஸ் பற்றி உருவாக்கம் - ஜூன் 2020 இது ஒரு ஒற்றைச் சாளர, சுயாதீனமான, முதன்மை முகமை ஆகும் இது விண்வெளித் துறையின் (DOS) கீழ் ஒரு தன்னாட்சி நிறுவனமாக செயல்படுகிறது. நோக்கம் - இந்தியாவில் தனியார் விண்வெளி துறை பொருளாதாரத்தை உயர்த்தல்.