Tag: காவல் கரங்கள்

 தமிழ்நாடு நிகழ்வுகள்

காவல் கரங்கள் திட்டம் மூலம் 3 ஆண்டுகளில் சென்னையில் 7712 ஆதரவற்றோர் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது. சென்னை பெருநகர காவல் துறை, அரசு மற்றும் அரசு சாரா தன்னார்வ தொண்டு அமைப்பினர் இணைந்து 'காவல் கரங்கள்' என்ற அமைப்பை கடந்த 2021 ஏப். 21-இல் தொடங்கினர். உரிமை கோரப்படாத 4,601 ஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்து 'காவல் கரங்கள்' சேவைப் பணியை மேற்கொண்டுள்ளது. 'காவல் கரங்கள்' அமைப்பின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில், கடந்த 2023- ஆம் ஆண்டு 'ஸ்காட்ச் விருது' வழங்கப்பட்டது இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்த தமிழக காவல் துறை முடிவு செய்துள்ளது