முக்கிய தினங்கள் உலக பெருங்கடல் தினம் – ஜுன் 8 உலக பெருங்கடல்களின் முக்கியத்துவத்தைக் கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 8ஆம் தேதி உலகப் பெருங்கடல் தினம் அனுசரிக்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் இந்த தினம் நிறுவப்பட்டது. நோக்கம் – கடல் சூழலைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல். 2023 இன் கருப்பொருள் – ”பெருங்கடல் கோள் : மாறுகின்ற அலைகள்” மாநிலங்களின் விவரம் கேரளம் : பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 3,800 கோயில்களில் பசுமைத் திட்டம் கேரள அறநிலைய துறையால் திருவிதாங்கூர், கொச்சி, மலபார், குருவாயூர், கூடல் மாணிக்கம் ஆகிய 5 தேவஸ்வம் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 3,000 கோயில்கள் உள்பட 3,800 கோயில்களில் பசுமைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. “தேவாங்கனம் ஷாருஹரித்தம்” (கடவுளின் புனித பசுமை இல்லங்கள்) என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் கோயில்வளாகம், அதன் சுற்றுப்புற பகுதிகளில் மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, கோயில் குளங்களைப் புதுப்பிப்பது, கோயில்களுக்குச் சொந்தமான தோட்டங்களைப் பராமரித்து பாதுகாப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். கேரளாவைப் பற்றி ஆளுநர் – ஆரிப் முகமது கான் முதல்வர் – பினராயி விஜயன் தலைநகரம் – திருவனந்தபுரம் புகழ்பெற்ற நபர்கள் காலமானார் டாக்டர் ஹக்கீம் சையது கலிஃபத்துல்லா யுனானி மருத்துவத் துறையில் சிறந்து விளங்கிய நிபுணர் டாக்டர் ஹக்கீம் சையது கலிஃபத்துல்லா, பல்வேறு நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியவர். மத்திய அரசு அவரது மருத்துவ சேவையைப் பாராட்டி 2014-இல் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. விளையாட்டு ஆசிய யு20 தடகள சாம்பியன்ஷிப் 2023: இந்திய விளையாட்டு வீரர்கள் கொரிய குடியரசின் (தென் கொரியா) யெச்சியோனில் நடைபெற்ற ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் 19 பதக்கங்களைப் பெற்றனர். பதக்கங்களின் எண்ணிக்கை தரவரிசை நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் 1 ஜப்பான் 14 4 5 23 2 சீனா 11 5 3 19 3 இந்தியா 6 7 6 19 தங்கப் பதக்கம் வென்ற இந்தியர்கள் ரெசோனா மல்லிக் ஹீனா – பெண்கள் 400 மீ லக்சிதா வினோத் சண்டிலா – பெண்கள் 1500 மீ ரெசோனா மல்லிக் ஹீனா/அனுஷ்கா தத்தாராய் கும்பர்/ரியா நிதின் பாட்டீல்/கனிஸ்டா டீனா – பெண்கள் 4 × 400 மீ தொடர் ஓட்டம் சித்தார்த் சவுத்ரி – ஆண்கள் குண்டு எறிதல் பரத்ப்ரீத் சிங் – ஆண்கள் வட்டு எறிதல் சுனில் குமார் – ஆண்கள் டெகாத்லான்