Tag: கலைஞர் கருவூலம் சிறப்பு இணையதள பக்கம்

தமிழ்நாடு நிகழ்வுகள

"சூழல் மன்றங்கள்" தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் "சூழல் மன்றங்கள்" ஏற்படுத்தப்படும் என்று காலநிலை உச்சி மாநாடு தொடக்க விழாவில் முதல்வர் அறிவித்துள்ளார் சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் சுற்றுச் சூழல் துறை சார்பில், "தமிழ் நாடு காலநிலை உச்சி மாநாடு0" நேற்று தொடங்கியது. தமிழகத்தின் எல்லா பள்ளிகளிலும் "சூழல் மன்றங்கள்" ஏற்படுத்தப்படும். சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. மேலும், "கால நிலைக்கு ஏற்ற வாழ்க்கை முறை" என்ற ஆவணமும் வெளியிடப்பட்டது . முதல் மாநிலம்: காலநிலை மாற்றம் குறித்து ஆராய்வதற்காக மாநாடு நடத்திய முதல் மாநிலம் தமிழ்நாடாகும் இதுவரை இரண்டு காலநிலை உச்சி மாநாடுகளை அரசு வெற்றிகரமாக நடத்தியுள்ளது வெப்ப அலையை மாநிலப் பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. வெப்ப அலையால் உயிரிழக்க நேரிட்டால் ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் கருவூலம் சிறப்பு இணையதள பக்கம் மு.கருணாநிதி நடத்திய, "தமிழிணையம் 99" மாநாட்டின் விளைவாக, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் தமிழ் இணையக் கல்விக்கழகம் கடந்த 2001ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தால் 39 நாடுகளில் 181 தொடர்பு மையங்கள் மூலமாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இணையவழியில் தமிழ் கற்பிக்கப்படுவதுடன், கணித்தமிழ் தொடர்பான ஆய்வுகள் மற்றும் கருவிகளை உருவாக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கருணாநிதியின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள "கலைஞர் கருவூலம்" என்ற சிறப்பு இணையப் பக்கத்தை https://tamildigitalibrary.in/kalaignar முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இப்பக்கத்தில் 955 அரிய உள்ளடக்கங்கள் இடம் பெற்றுள்ளன.