Tag: ஐஎஸ்எஸ்எஃப் ஜுனியர் உலகக் கோப்பை 2023ல் இந்தியா முதலிடம் பிடித்தது

வரலாறு

பாதுகாப்பு ஓமன் வளைகுடாவில் இந்தியா-பிரான்ஸ்-யுஏஇ இடையேயான முதல் முத்தரப்பு கடல்சார் பயிற்சி இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) இடையிலான கடல்சார் ஒத்துழைப்பு பயிற்சியின் முதல் பதிப்பு ஓமன் வளைகுடாவில் 2023 ஜுன் 7 முதல் 9 வரை நடைபெற்றது. நோக்கம் மூன்று கடற்படைகளுக்கு இடையே முத்தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல். கடல் சூழலில் பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளல். பங்கேற்பாளர்கள் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் (இந்திய கடற்படை கப்பல்) தர்காஷ் (2012 - இல் இயக்கப்பட்ட இரண்டாவது தல்வார் வகை போர்க்கப்பல்) பிரெஞ்சு கடற்படையில் பிரெஞ்சு கப்பல் Surcouf மற்றும் ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர்கள், பிரேஞ்சு ரஃபேல் விமானங்கள்  ஐக்கிய அரபு அமீரக கடற்படையின் கடல்சார் ரோந்து விமானம்  குறிப்பு ஓமன் வளைகுடா வடக்கில் ஈரான் மற்றும் பாகிஸ்தானையும், தெற்கில் ஓமன் மற்றும் மேற்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸையும் எல்லையாகக் கொண்டுள்ளது. பிரான்ஸ் பற்றி தலைவர் - இம்மானுவேல் மேக்ரான் பிரதமர் - எலிசபெத் போர்ன் தலைநகரம் - பாரிஸ் நாணயம் - யூரோ (2002க்கு முன், பிராங்க்) UAE பற்றி ஜனாதிபதி - முகமது பின் சயீத் அல் நஹ்யான் பிரதமர் - முகமது பின் ரஷித் அல் மக்தூம் தலைநகரம் – அபுதாபி நாணயம் – திர்ஹாம் விளையாட்டு ஐஎஸ்எஸ்எஃப் ஜுனியர் உலகக் கோப்பை 2023ல் இந்தியா முதலிடம் பிடித்தது ஜெர்மனியின் சுஹலில் நடைபெற்ற ISSF ஜுனியர் உலகக் கோப்பை 2023 பதக்கப் பட்டியலில் இந்தியா 6 தங்கம், ஆறு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. பதக்கங்களின் எண்ணிக்கை தரவரிசை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் 1 இந்தியா 6 6 3 15 2 கொரியா 6 5 1 12 3 அமெரிக்கா 5 4 0 9   தங்க பதக்கம் வென்ற இந்தியர்கள் போட்டியாளர்கள் போட்டி சயின்யம் பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் தனுஷ் ஸ்ரீகாந்த் ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் அமன்பிரீத் சிங் ஆண்களுக்கான 25 மீ பிஸ்டல் கௌதமி பானோட்/அபினவ் ஷா 10மீ ஏர் ரைபிள் கலப்பு அணி கௌதமி பானோட்/சுவாதி சௌத்ரி/ சோனம் உத்தம் மஸ்கர் பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் அணி மேகனா சாதுலா/பயல்/காத்ரி/சிம்ரன்ப்ரீத் கவுர் பிரார் பெண்கள் 25 மீ பிஸ்டல் அணி