Tag: எவரெஸ்ட் உச்சம் தொட்ட முதல் தமிழ் பெண்

வரலாறு

சமீபத்திய வரலாற்று நிகழ்வுகள் எவரெஸ்ட் உச்சம் தொட்ட முதல் தமிழ் பெண் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொட்ட பெண்ணுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.  விருதுநகர் மாவட்டம், ஜோகில்பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி சில வாரங்களுக்கு முன்பாக எவரெஸ்ட் சிகரத்தைத் தொடும் முயற்சியைத் தொடங்கினார். தற்போது சிகரத்தின் உச்சியைத் தொட்டு சாதனை படைத்துள்ளார். அவர் மே 23 அன்று உச்சியை அடைந்து மே 26 அன்று காத்மாண்டு திரும்பினார். சிகரத்தை அடைந்து முகாமுக்குத் திரும்புவதற்கு அவருக்கு 56 நாட்கள் ஆனது. குறிப்பு: பச்சேந்திரி பால்-முதல் இந்திய பெண் எவரெஸ்ட் சிகரத்தில் – 23 மே 1984. நியமனங்கள் உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி. கங்காபுர்வாலா பதவியேற்பு  சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்த நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலாவை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபுர்வாலா 2023 மே 28ல் பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.