Tag: உலக தாய்ப்பால் வாரம்

வரலாறு

முக்கிய தினங்கள் இந்திய உறுப்பு தான தினம் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆகஸ்ட் 3 அன்று ஆண்டுதோறும் இந்திய உறுப்பு தான தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் 1994 ஆகஸ்ட் 3 அன்று முதல் முறையாக இறந்தவரின் இதய மாற்று அறுவை சிகிச்சையை நினைவுகூரும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பு உலக உறுப்பு தான தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 அன்று அனுசரிக்கப்படுகிறது. உலக தாய்ப்பால் வாரம் புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவதன் முக்கியத்துவத்தை ஊக்குவிக்க ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது. 2024 கருப்பொருள்: Closing the gap: Breastfeeding support for all. நியமனங்கள் BSF-ன் புதிய இயக்குனர் சமீபத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) புதிய இயக்குனராக தல்ஜித் சிங் சௌதரி நியமிக்கப்பட்டார். இவர் சாஸ்த்ரா சீமா பாலின் (SSB) இயக்குனர் ஜெனரலாக பணியாற்றினார் மேலும் இவருக்கு எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) இயக்குநர் ஜெனரலாக கூடுதல் வழங்கப்பட்டுள்ளது. BSF பற்றி V நிறுவப்பட்டது - 1965 V மத்திய ஆயுதப் போலீஸ் படையின் ஒரு பிரிவாகும். உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.