முக்கிய நாட்கள் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் வீரர்களின் சர்வதேச தினம் – மே 29 இது 2002 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் நிறுவப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் பணயாற்றும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அஞ்சலி செலுத்துவதும், அமைதிக்காக உயிர்நீத்தவர்களைக் கௌரவிப்பதும் இதன் நோக்கமாகும். இந்த ஆண்டின் நோக்கம் “அமைதி என்னில் இருந்து தொடங்குகிறது“ என்பதாகும். இந்த ஆண்டு ஐநா-75வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. விளையாட்டு உலக தடகளத்தில் மதுரை வீரருக்கு தங்கம் கிரீஸ் நாட்டில் நடைபெற்ற கான்டினென்டல் உலக தடகள போட்டியில் டிரிபிள் ஜம்ப் பிரிவில், இந்தியா சார்பில் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் செல்வப்பிரபு திருமாறன் (18), 16.78 மீ தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில், ஏற்கெனவே வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் செல்வப்பிரபு.