Tag: உலக சுற்றுச்சூழல் தினம் – ஜுன் 5

வரலாறு

முக்கிய தினங்கள் உலக சுற்றுச்சூழல் தினம் – ஜுன் 5 உலக சுற்றுச்சூழல் தினம் ஜுன் 5 அன்று அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை சுற்றுச்சூழல் சவால்கள் குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கவும் ஊக்குவிக்கவும் 1972 - இல் உலக சுற்றுச்சூழல் தினத்தை நிறுவியது. கருப்பொருள் 2023 – ”நெகிழி மாசுபாட்டிற்கான தீர்வுகள்”. உலக அமைப்புகள் எண்ணெய் உற்பத்தி மேலும் குறைப்பு: “ஒபெக் பிளஸ்” ஆலோசனை உலக நாடுகளின் பணவீக்கத்தைக் கட்டப்படுத்த பெரிதும் உதவிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவதைத் தடுக்க, அதன் உற்பத்தியை மேலும் குறைக்க “ஒபெக் பிளஸ்” கூட்டமைப்பு நாடுகள் முடிவு செய்துள்ளன. ரஷியா, சவூதி அரேபியா உள்ளிட்ட 23 பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி நாடுகள் அடங்கிய ஒபெக் பிளஸ் கூட்டமைப்பின் கூட்டம், ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெற்றது. OPEC+ உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் அதிக கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதற்காக 2016-இல் உருவாக்கப்பட்டது. OPEC+ நாடுகளின் எண்ணிக்கை – 23 (13 OPEC உறுப்பினர்கள் மற்றும் 10 உலகின் முக்கிய OPEC அல்லாத எண்ணெய் ஏற்றுமதி நாடுகள்). பின்னணி பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (OPEC) என்பது 1960 இல் பாக்தாத் மாநாட்டில் ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா மற்றும் வெனிசுலாவால் உருவாக்கப்பட்ட அரசுகளுக்கிடையேயான ஒரு நிரந்தர அமைப்பாகும். நியமனங்கள் மணிப்பூர் கலவரம்: 3 நபர் ஆணையம் விசாரிக்க மத்திய அரசு உத்தரவு கலவரத்துக்கான காரணம் மற்றும் பரவல் குறித்து விசாரிக்க குவாஹாட்டி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் லம்பா தலைமையில் 3 நபர்கள் ஆணையம் அமைக்கப்பட்டள்ளது. ஆணையத்தில் ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஹிமான்சு சேகர், ஓய்வுப் பெற்ற ஐபி எஸ் அதிகாரி அலோகா பிரபாகர் ஆகியோர் ஆணையத்தில் இடம்பெறுகின்றனர். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள “மைதேயி” சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க கோரி வருகின்றனர். இதற்கு “நாகா” மற்றம் ”குகி” சமூகத்தினர் அடங்கிய சிறுபான்மை பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.