முக்கிய தினங்கள் உலக அறிவுசார் சொத்துரிமை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 26-ம் தேதி உலக அறிவுசார் சொத்துரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது 2000 ஆம் ஆண்டில் உலக அறிவுசார் சொத்து அமைப்பால் (WIPO) நிறுவப்பட்டது. காப்புரிமைகள், பதிப்புரிமை மற்றும் வர்த்தகமுத்திரைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும். உலக அறிவுசார் சொத்துரிமை தினம் 2023 இன் கருப்பொருள் :"பெண்கள் புதுமை மற்றும் படைப்பாற்றலை துரிதப்படுத்துதல் " பாதுகாப்பு ராணுவ செலவினம்: 4-ஆவது இடத்தில் இந்தியா! ராணுவத்துக்கான மொத்த செலவினமானது சர்வதேச மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 2.2 சதவீதமாக உள்ளது. ராணுவத்துக்கு அதிகமாக செலவிடும் நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சீனா 2-ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டில் 3-ஆவர் இடத்தில் இருந்த இந்தியாவை கடந்த ஆண்டில் ரஷியா பின்னுக்குத் தள்ளியுள்ளது. இந்தியா 4-ஆவது இடத்திலும், சவூதி அரேபியா 5-ஆவது இடத்திலும் உள்ளன. உலக அமைப்புகள் உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தை இந்தியா நடத்துகிறது. 2023 ஆம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவராக இந்தியா 28 ஏப்ரல் 2023 அன்று புதுதில்லியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தை நடத்த உள்ளது. பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்குள் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் மற்றும் பயனுள்ள பன்முகத்தன்மை தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்து பாதுகாப்பு அமைச்சர்கள் விவாதிக்க உள்ளனர். SCO பற்றி: SCO என்பது நிரந்தர அரசுகளுக்கிடையேயான சர்வதேச அமைப்பாகும். இது 2001 இல் உருவாக்கப்பட்டது. இது ஒரு யூரேசிய அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ அமைப்பாகும், இது பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2023 இல் SCO உச்சி மாநாட்டை இந்தியா நடத்துகிறது. உறுப்பு நாடுகள்: கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான். தலைமையகம்: பெய்ஜிங், சீனா