Tag: உலகின் மிக உயரமான ரயில் பாலம்

வரலாறு

முக்கிய இடங்கள் உலகின் மிக உயரமான ரயில் பாலம் உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான  செனாப் பாலத்தில் , ஜனவரி 2024க்குள் ரயில்கள் இயக்கப்படும். வளைவுப் பாலத்தில் டிராக் பொருத்தப்பட்ட தொடர்வண்டியின் முதல் ஓட்டம் மார்ச் 21 அன்று நடத்தப்பட்டது. இந்த பாலம் 359 மீ உயரத்தில் உள்ளது, இது பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட(330 மீ) உயரமானது, செனாப் பாலம் நில அதிர்வு அதிகம் உள்ள பகுதியில் கட்டப்பட்டுள்ளது . பாலத்தின் அடித்தளம் ரிக்டர் அளவுகோலில் 8 வரை நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. வளைவுப் பாலம் அமைக்க 28,000 டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. விளையாட்டு: புதுதில்லியில்  நடைபெற்ற  மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 50 கிலோ பிரிவில் தங்கம் வென்றார் நிகத் ஜரீன். இறுதிப் போட்டியில் வியட்நாமின் தி தாம் நியுஜெனை நிகாத் தோற்கடித்தார். மேரி கோமுக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப்பில் பல தங்கப் பதக்கங்களை வென்ற 2வது இந்தியப் பெண் நிகத் ஆவார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத்தைச் சேர்ந்தவர் நிகத் ஜரீன். தற்போது நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வெல்லும் மூன்றாவது தங்கப் பதக்கம் இதுவாகும். இதற்கு முன் நிது கங்காஸ் (48 கிலோ) மற்றும் சவீதி பூரா (81 கிலோ) ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். புதுதில்லியில் நடைபெற்ற IPA மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் லவ்லினா போரோகைன்   இந்தியாவின் நான்காவது தங்கத்தை வென்றார் . டோக்கியோ ஒலிம்பிக்கில்  70-75 கிலோ இறுதிப் போட்டியில் சிறப்பான  ஆட்டத்தை வெளிப்படுத்தி வெண்கலப் பதக்கம் வென்றார் , அங்கு அவர் ஆஸ்திரேலியாவின் கெய்ட்லின் அன்னே பார்க்கரை தோற்கடித்தார். 2018 மற்றும் 2019 பதிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு,லவ்லினா வென்ற முதல் தங்கம் இதுவாகும். லவ்லினா போரோகைன் அசாம் மாநிலம் கோலாகாட்டை சேர்ந்தவர் .