Tag: இந்திய நீதி அறிக்கை 2022 கணக்கெடுப்பில் தமிழ்நாடு சிறைத்துறை முதலிடம்

தமிழ்நாடு நிகழ்வுகள்

திறனறிவுத்  தேர்வு திட்டம்: அரசு பள்ளி மாணவர்களுக்கான திறனறிவுத்  தேர்வு திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார் திறனறிவுத் தேர்வு திட்டத்தில்,   முதன்மையான கல்வி  நிறுவனங்களின்  வழிகாட்டுதலைப் பெறுவதற்கு 1,000 மாணவர்கள் அரசு பள்ளிகளில்  இருந்து தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாத உதவித்தொகை ₹1,000 வழங்கப்படும். “இத்திட்டத்தின் நோக்கம் மாணவர்களை உயர்கல்வியைத் தொடர ஊக்குவிப்பதாகும், இந்தத் திட்டத்தின் கீழ் அவர்களின் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளின் போது ஆண்டு உதவித்தொகையாக ₹12,000 கிடைக்கும். அனைவருக்கும் ஐஐடி-எம்: பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து அனைவருக்கும் ஐஐடி-எம் என்ற திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார் அனைவருக்கும் ஐஐடிஎம் முயற்சியானது நான் முதல்வன் திட்டத்தின் முன்னோடியாகும். இத்திட்டத்தின் நோக்கம்  இளம் கிராமப்புற மாணவர்களிடம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆர்வத்தை ஏற்படுத்துவதாகும். இம்முயற்சியின் ஒரு பகுதியாக பயிற்சி பெறும் 252 ஆசிரியர்கள், ஒரு லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளனர். எலக்ட்ரானிக்ஸ்  துறையானது இப்போது பல தொழில்களுக்கு அடித்தளமாக உள்ளது, மேலும் இந்த முயற்சியானது மாநிலத்தை $1 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றுவதற்கு உதவும் . இந்திய நீதி அறிக்கை 2022 கணக்கெடுப்பில் தமிழ்நாடு சிறைத்துறை முதலிடம் பல்வேறு தரவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்திய நீதி அறிக்கை (IJR) 2022 கணக்கெடுப்பில் தமிழ்நாடு சிறைத்துறை முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 10 புள்ளிகளுக்கு தமிழகம் 6.4 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.  அதைத் தொடர்ந்து கர்நாடகா 6.01, தெலுங்கானா 5.35 புள்ளிகள் எடுத்தன. அளவுருக்கள்   உள்கட்டமைப்பு  கைதிகளின் எண்ணிக்கை  திருத்தும் முயற்சிகள்