பாதுகாப்பு ஆசியான் இந்தியா கடல்சார் பயிற்சி (AIME-2023) AIME-2023 பயிற்சி மே 2 முதல் 8 வரை இரண்டு கட்டங்களாக நடத்தபட்டது. INS சத்புரா மற்றும் INS டெல்லி ஆகிய இரண்டு இந்திய கடற்படைக் கப்பல்களும் பயிற்சியில் பங்கேற்றன. கடற்படை பயிற்சியின் துறைமுக கட்டம் மே 2 முதல் 4 வரை சாங்கி கடற்படை தளத்தில் நடைபெற்றது. தென் சீனக் கடலில் மே 7 முதல் 8 வரை கடல் கட்டமும் நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியானது இந்திய கடற்படை மற்றும் ஆசியான் கடற்படைகள் நெருக்கமாக பணிபுரியவும், கடல்வழியில் தடையற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வாய்ப்பளிக்கும். இதில் பங்கேற்கும் கப்பல்கள், சிங்கப்பூர் துறைமுகத்தில் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி (IMDEX-23) மற்றும் சிங்கப்பூரில் நடத்தப்படும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கும். ஐஎன்எஸ் டெல்லி, இந்தியாவின் முதல் உள்நாட்டில் கட்டப்பட்ட வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான் ஆகும். ஐஎன்எஸ் சத்புரா, உள்நாட்டிலேயே கட்டப்பட்ட வழிகாட்டப்பட்ட ஏவுகணை போர்க்கப்பலாகும். விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை அலகில் இந்த இரு கப்பல்களும் உள்ளன. ASEAN பற்றி ASEAN – தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம். 1967 இல் பாங்காக்கில் (தாய்லாந்து) நிறுவப்பட்டது. பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் கலாச்சார வளர்ச்சியை விரைவுபடுத்தவும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தவும் அமைக்கப்பட்டது. ASEAN நாடுகள் - புருனே, கம்போடியா, இந்ததோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம். விளையாட்டு ஆசிய சாம்பியன்ஷிப் பாட்மிண்டனில் தங்கம் இந்தியாவின் முன்னணி ஆண்கள் இரட்டையர் ஜோடி சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி மலேசிய ஜோடியான ஓங் யூ சின் மற்றும் தியோ ஈ யியை வீழ்த்தி தங்கம் வென்றனர். ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி துபாயில் நடந்தது. விருதுகள் & கௌரவங்கள் கலை விமர்சகர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் சாகித்ய அகாடமி விருது பெற்றவர் இந்திரன் (பி.ஜி.ராஜேந்திரன்) வேர்ச்சொல் தலித் இலக்கிய விருதைப் பெற்றார். நீலம் கலாச்சார மையத்தின் (NCC) ஒரு பகுதியாக இவ்விருது நிறுவப்பட்டது. அவரது மிக முக்கியமான படைப்பு, ”அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்” (1982) (31 ஆப்பிரிக்க நாடுகளின் கட்டுரைகள், கதைகள் மற்றும் கவிதைகளின் புத்தகம்). அவரது அறிமுக இந்திய இலக்கியம் 1986 இல், ”காற்றுக்கு திசை இல்லை” ஆகும். 1994 இல், அவர் ”பசித்த தலைமுறை” என்ற மூன்றாம் உலக நாடுகளின் கவிதைப் படைப்பை மொழிபெயர்த்து வெளியிட்டார். ஆஸ்திரேலியாவின் உயரிய சிவிலியன் கவுரவம் ஆஸ்திரேலியாவின் உயரிய சிவிலியன் கௌரவமான ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா டாடா சன்ஸ் நிறுவனத்தின் எமரிட்டஸ் தலைவர் ரத்தன் டாடாவுக்கு வழங்கப்பட்டது. இந்தியா-ஆஸ்திரேலியா இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதலில் அவரது முயற்சிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.