அஸ்ட்ராஜெனெகா பிரிட்டனை தளமாகக் கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா அதன் COVID-19 தடுப்பூசியை உலகளாவிய அளவில் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் வழங்கப்பட்டது. சமீபத்தில் இந்த நிறுவனம் அரிதான பக்க விளைவுகளான இரத்தம் உறைதல் மற்றும் ரத்த தட்டை அணுக்கள் எண்ணிக்கை குறைவதை ஒப்புக்கொண்டது.