Tag: அகழாய்வில் வாய்க்கால் அமைப்பு (கங்கைகொண்ட சோழபுரம்)

வரலாறு

இராணுவம் ஐ.என்.எஸ் விக்ராந்த் இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலில் மிக்-29 கே போர் விமானம் 24.05.2023 இரவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. ரஷியாவிடம் இருந்து வாங்கப்பட்ட மிக்-29 கே போர் விமானமும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜஸ் போர் விமானமும் கடந்த பிப்ரவரி மாதம் பகல் நேரத்தில் விக்ராந்த் போர்க் கப்பலில் தரையிறக்கப் பட்டது. முதல் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார். ஐ.என்.எஸ் விக்ராந்த் கேரளாவில் உள்ள கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL) மூலம் கட்டப்பட்டது. விக்ராந்த் என்ற பெயர் இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை (1961) கௌரவிக்க வைக்கப்பட்டது. விக்ராந்த் என்றால் ”தைரியம்”. சமீபத்திய வரலாற்று நிகழ்வுகள் திப்பு சுல்தானின் வாள் மைசூர் மன்னர் திப்பு சுல்தானின் போர் வாள் லண்டன் அருங்காட்சியகத்தில் ரூ.140 கோடிக்கு ஏலம் போனது. மைசூரின் புலி என அறியப்படும் மன்னர் திப்பு சுல்தான். முதலாம் ஆங்கிலேய மைசூர் போர் 1767 – 1769 இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் 1780 – 1784 மூன்றாவது ஆங்கில மைசூர் போர் 1789 – 92 நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் 1798 – 4 மே 1799 முக்கிய இடங்கள் பற்றிய செய்திகள் அகழாய்வில் வாய்க்கால் அமைப்பு (கங்கைகொண்ட சோழபுரம்)  அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள மாளிகைமேடு கிராமத்தில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அண்மையில் செங்கற்கல்லால் ஆன வாய்க்கால் போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. இராஜேந்திர சோழன் 1019இல் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றியும் கண்டார். அதனால் கங்கை கொண்ட சோழன் என்ற பட்டமும் பெற்றார். அதன் நினைவாக 1023 இல் கங்கை கொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரை உருவாக்கினார். இவ்வூர் 250 ஆண்டுகள் பிற்கால சோழ பேரரசின் தலைநகரமாக விளங்கியது.