Tag: முழியன் குளம்

தேசிய செய்திகள்

மன் கீ பாத் சூழல்: ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் 'மனதின் குரல்' (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடம் பிரதமர் உரையாற்றி வருகிறார்.  அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) ஒலிபரப்பான 135-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் உரை வருமாறு: பிரதமரின் விபத்துக் காப்பீடு திட்டம் மற்றும் பிரதமரின் ஆயுள் காப்பீடுத் திட்டத்தின் சாதனைகளை எடுத்து உறைத்தார். பிரதமரின் விபத்துக் காப்பீடுத் திட்டம் பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் என்பது, ஒரு வருட விபத்து காப்பீட்டுத் திட்டமாகும். விபத்தினால் ஏற்படும் மரணம் அல்லது உடல் ஊனத்திற்க்கு காப்பீடு பாதுகாப்பு  வழங்கும் திட்டத்தை வருடத்திற்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்ளலாம். 18 முதல் 70 வயது வரையில் உள்ள, தனி நபர் வங்கி கணக்கு அல்லது அஞ்சலக கணக்கு வைத்திருப்போர், இத்திட்டத்தில் சேர தகுதி உடையோர். ஆண்டுதோறும் ரூ. 20 ஐ காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தினால், விபத்தால் இறப்போர் அல்லது உடல் ஊனம் ஏற்பட்டால் ரூ. 2 லட்சம் (சிறிதளவு ஊனத்திற்கு ரூபாய் 1 லட்சம்) வழங்கப்படும். சாதனைகள் இது வரை இந்தத் திட்டத்தில் 58 கோடிக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இவர்களில் 28 கோடிக்கும் மேற்பட்டோர் பெண்களாவர்.  இந்தத் திட்டத்தின் வாயிலாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை ரூ.3.700 கோடிக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது.  பிரதமரின் ஆயுள் காப்பீடுத் திட்டம்  பிரதமரின் ஆயுள் காப்பீடுத் திட்டம் என்பது ஒரு வருட ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும்.  இது ஆண்டுதோறும் புதுப்பிக்கத்தக்கது. எந்த காரணத்திற்காக மரணம் நிகழ்ந்தாலும் இறப்பிற்கு பின் இழப்பீடு வழங்குகிறது. 18-50 வயதுக்குட்பட்ட தனிநபர் வங்கி அல்லது தபால் அலுவலகக் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்ய முடியும்.  50 வயதைத் தொடும் முன் திட்டத்தில் சேரும் நபர்கள், வழக்கமான பிரீமியத்தைச் செலுத்தினால், 55 வயது வரையிலான ஆயுள் காப்பீட்டைத் தொடரலாம். ஆண்டுக்கு ரூ 436/- பிரீமியம் செலுத்துவோருக்கு, ஏதேனும் காரணத்தால் மரணம் ஏற்பட்டால் ஆயுள் காப்பீடாக ரூ. 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். சாதனைகள் இந்தத் திட்டத் தில் இதுவரை 27 கோடிக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.  இதுவரை சுமார் 11 லட்சம் குடும்பங்களுக்குக் கிட்டத்தட்ட ரூ.22,000 கோடி காப்பீட்டுத் தொகை கிடைத்துள்ளது.   ஊரக உள் தணிக்கை இணையதளம் சூழல்: ஜூலை 1 முதல் வேலைவாய்ப்பு மற்றும் ஆஜீவிகா திட்டத்திற்கான (கிராமின்) விக்சித் பாரத் உத்தரவாதம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னதாக, மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் "ஊரக உள் தணிக்கை இணையதளத்தை" தொடங்கி வைத்தார். ஊரக உள் தணிக்கை இணையதளத்தின் முக்கிய அம்சங்கள் முழுமையான டிஜிட்டல் தணிக்கை மேலாண்மை எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கைகள் மற்றும் துணைத் தீர்வு மையப்படுத்தப்பட்ட தணிக்கைக் களஞ்சியம் பன்மொழி மற்றும் பயனர் நட்பு இடைமுகம் செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வு ஊரக உள் தணிக்கை இணையதளத்தின் நோக்கங்கள் உள் தணிக்கை செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குதல். தணிக்கை நடைமுறைகளை எளிமையாக்குதல். செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை மேம்படுத்துதல். ஒரு மையப்படுத்தப்பட்ட தணிக்கைக் களஞ்சியத்தை உருவாக்குதல். இடர் அடிப்படையிலான தணிக்கைத் திட்டமிடலைச் செயல்படுத்துதல். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமைப்பு ரீதியான பலவீனங்களைக் கண்டறிதல்.…