Tag: சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு

பிஃபா 17 வயது மகளிர் உலகக் கோப்பை போட்டி

பிஃபா 17 வயது மகளிர் உலகக் கோப்பை போட்டி

பிஃபா 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் 2021 பிப்ரவரி 17 முதல் மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெறும் என சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) அறிவித்துள்ளது. குறிப்பாக டோக்கியோ ஒலிம்பிக் உள்பட முக்கிய போட்டிகள் 2021-ஆம் ஆண்டு ஜுலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிஃபா 17 வயது மகளிர்உலகக் கோப்பை: இந்நிலையில் பிஃபா 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பை போட்டி 2020 நவம்பர் மாதம் 2 முதல் 21 வரை இந்தியாவில் ஆமதாபாத், புவனேசுவரம், குவாஹாட்டி, கொல்கத்தா, நவி மும்பை உள்ளிட்ட 5 நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.