Tag: : உலக குத்துச்சண்டை போட்டி

அடுத்த ஆண்டுக்கான உலக குத்துச்சண்டை போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா இழந்தது

அடுத்த ஆண்டுக்கான (2021) உலக ஆண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியை டெல்லியில் நடத்துவதற்கான உரிமையை இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் பெற்று இருந்தது. கடந்த 2017-ம் ஆண்டில் சர்வதேச குத்துச்சண்டை சங்கத்துடன் இதற்கான ஒப்பந்தத்தை இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் செய்தது. இந்த போட்டி உரிமத்துக்கான கட்டணமாக ரூ.30 கோடியை சர்வதேச குத்துச்சண்டை சங்கத்துக்கு கடந்த ஆண்டு (2019) டிசம்பர் 2-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஆனால் அதற்கான தொகையை இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் இன்னும் செலுத்தவில்லை. இதனை அடுத்து, உலக ஆண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதற்காக இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு வழங்கி இருந்த உரிமத்தை சர்வதேச குத்துச்சண்டை சங்கம் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இந்த போட்டியை நடத்தும் உரிமையை செர்பியாவுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்திய குத்துசண்டை கூட்டமைவு தலைமையிடம் – டெல்லி தலைவர் – அஜய் சிங்