பாதுகாப்பு நவீன “அக்னி பிரைம்” ஏவுகணை சோதனை வெற்றி அணு அயுதங்களை ஏந்திச் செல்லும் நவீன “அக்னி பிரைம்” ஏவுகணை ஒடிஸா மாநில கடல் பகுதியில் உள்ள ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் தீவிலிருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கெனவே 3 முறை பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில், ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கு முன்பாக, முதன் முறையாக இரவு நேரத்தில் ஏவப்பட்டு, ஏவுகணையின் துல்லியம், செயல்முறையின் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அக்னி-P பற்றி அக்னி பாலிஸ்டிக் ஏவுகணைகள் வரிசையில் இது ஆறாவது ஏவுகணையாகும். இரட்டை வழிகாட்டுதல் அமைப்புடன் நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்குகளை தாக்கும். செயல்பாட்டு வரம்பு – 1000-2000 கிலோமீட்டர்கள் இந்தியா-மாலத்தீவுகள் இடையேயான ஏக்தா (Ekatha) பயிற்சி மாலத்தீவில் இந்திய கடற்படை டைவர்ஸ் மற்றும் கடற்படை கமாண்டோக்கள் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையுடன் (MNDF) ஜுன் 4 முதல் ஜுலை 3 வரை நடைபெறும் ஏகதா பயிற்சியின் ஆறாவது பதிப்பில் ஈடுபட்டுள்ளனர். டைவிங் மற்றும் சிறப்பு நடவடிக்கைகளில் திறனை மேம்படுத்துவதற்காக இரு படைகளுக்கும் இடையே வருடாந்திர பயிற்சி நடத்தப்படுகிறது. மாலத்தீவு பற்றி அதிபர் – இப்ராஹிம் முகமது சோலி தலைநகரம் – மாலி நாணயம் – மாலத்தீவு ரூபியா முக்கிய இடங்கள் பற்றிய செய்திகள் செர்பிய அதிபருடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சந்திப்பு செர்பிய அதிபர் அலெக்சாண்டர் வூசிக்கை அந்நாட்டுத் தலைநகர் பெல்கிரேடில் சந்தித்துப் பேசினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. செர்பியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு என்பது குறிப்பிடத்தக்கது. அணிசேராநாடுகள் இயக்க காலத்தில் இருந்தே இந்தியா, செர்பியா இடையிலான உறவுகள் விசேஷமானவை. செர்பியா பற்றி அதிபர் – அலெக்சாண்டர் வுசிக் தலைநகரம் – பெல்கிரேட் நாணயம் – தினார்