Tag: இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கம்

அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பிரிட்டன்-இந்தியா மூலோபாய உரையாடல் ஆண்டுதோறும் நடைபெறும் பிரிட்டன்-இந்தியா இடையேயான மூலோபாய உரையாடல் லண்டனில் சமீபத்தில் நடைபெற்றது. பரஸ்பர நன்மை பயக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) செய்துகொள்வதாக இந்தியாவும் பிரிட்டனும் உறுதியளித்துள்ளன. இந்தியாவும் பிரிட்டனும்  செயல்திட்டம் 2030ல் ஏற்பட்ட முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்துள்ளன. குறிப்பு பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 2021 இல் செயல்திட்டம் 2030 உருவாக்கப்பட்டது. பிரிட்டன் பற்றி தலைநகர் – லண்டன் மன்னர் - சார்லஸ் III பிரதமர் - ரிஷி சுனக் நாணயம் - பவுண்ட் ஸ்டெர்லிங் நலத்திட்டங்கள் இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கம் மத்திய அமைச்சரவை சமீபத்தில் ரூ.10,371.92 கோடி பட்ஜெட் மதிப்பிலான விரிவான தேசிய அளவிலான இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டமானது செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் ஒரு விரிவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா ஆணையத்தின் கீழ் உள்ள இந்தியாAI எனப்படும் சுதந்திரமான தொழில் பிரிவால் செயல்படுத்தப்படுகிறது DIC பற்றி இது மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (MeitY) அமைக்கப்பட்டது. குறிக்கோள் - மக்களின் நலனுக்காக ICT மற்றும் பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை புதுமைப்படுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் பயன்படுத்துதல்.