Tag: அக்னிபான் SorTeD

அறிவியல்

விண்வெளி அக்னிபான் SorTeD சென்னையைச் சேர்ந்த விண்வெளி புத்தாக்க நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ் என்ற தனியார் நிறுவனம் அதன் முதல் ராக்கெட்டான அக்னிபான் சப் ஆர்பிட்டல் டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டரை (SOrTeD) ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவியது. அக்னிபான் SorTeD என்பது, தனியார் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட்டாகும் இந்தியாவின் முதல் செமி கிரையோஜெனிக் இன்ஜின் ராக்கெட்டாகும். உலகின் முதல் 3D அச்சிடப்பட்ட இன்ஜின் மற்றும் உள்நாட்டிலே வடிவமைக்கப்பட்டது. குறிப்பு இன்-ஸ்பேஸ் நிறுவனத்தின் முயற்சியின் கீழ் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (ISRO) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாட்டின் முதல் நிறுவனம் அக்னிகுல் காஸ்மோஸ் ஆகும். இன்-ஸ்பேஸ் நிறுவனத்தின் இம்முன்முயற்சியானது இந்தியாவில் தனியார் விண்வெளித் துறையின் பொருளாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.