தொல்குடி புத்தாய்வு திட்டம் மாணவர்களுக்கு சான்றிதழ்
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் தமிழ்நாடு பழங்குடியின மக்களை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள தொல்குடி புத்தாய்வு திட்டம் தொடங்கப்பட்டது.
- இந்தத் திட்டத்துக்கு ஆண்டு தோறும் ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக பழங்குடியினர் வாழ்வியல் கலை, மொழி, கைவினைகலை பாரம்பரியம் ஆகியவை குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தொல்குடி புத்தாய்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இளநிலை, முதுநிலை, முனைவர் ஆராய்ச்சிப் படிப்புக்காக 70 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- முதுநிலை மாணவர்களுக்கு மாதம் தலா ரூ.10 ஆயிரமும் முனைவர் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
15-ஆம் நூற்றாண்டு பெருமாள் சிலை கண்டெடுப்பு
- புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெருமாள் சிலையொன்றை தொல்லியல் ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர்.
- கி.பி.15, 16 ஆண்டுகளின் போது இந்தப் பகுதியை பல்லவ மன்னர்கள் ஆண்டனர். இச்சிலை பல்லவ பாணியில் கலை நுணுக்கத்தோடு வடிக்கப்பட்டுள்ளது.
சுயஉதவிக்குழுவில் கனவு இல்லத்திட்ட பெண் பயனாளிகள்
- கனவு இல்லம் திட்டத்தைச் சேர்ந்த பெண் பயனாளிகள், சுய உதவிக் குழுக்களில் இணைந்து பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- இதையடுத்து, திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ளார்.
- குடிசை அமைந்துள்ள இடம், ஆட்சேபணையற்ற புறம் போக்கு நிலம் என்றால், அந்த ஆக்கிரமிப்பு வருவாய்த் துறையால் வரன்முறை செய்யப்பட்டிருந்தால் வீடு வழங்க பரிசீலிக்கப்படும்.
- ஒரு வீட்டுக்கான மொத்த அலகுத் தொகையில் ஒவ்வொரு பயனாளிக்கும் வீடு கட்டுவதற்கு 90 மனிதசக்தி நாள்களுக்கும், கழிப்பறை கட்டுவதற்கு 10 மனித சக்தி நாள்களுக்குமான தொகை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
- தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கழிப்பறை கட்ட அலகுத் தொகையாக ரூ.12,000 வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் எரிவாயு, குடிசைகளுக்கான மின் இணைப்புகள் வழங்க வேண்டும்.
- வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு 15-வது மானியத்தின் கீழ் கழிப்பறை கட்ட அலகுத் தொகையாக ரூ.12,000 வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் எரிவாயு, குடிசைகளுக்கான மின் இணைப்புகள் வழங்க வேண்டும்.
- வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு 15-வது மானியத்தின் கீழ் வழங்க வேண்டும். பயனாளி விரும்பும் பட்சத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் ரூ.50,000 வரை கடன் பெறலாம் அல்லது கூட்டுறவு, வணிக வங்கிகளிடமிருந்து கடன் பெற வாய்ப்புள்ளது.